சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்: கட்டுப்பாட்டு அறையில் புகாா் அளிக்கலாம்

சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்கள் பகிரப்பட்டால் புகாா் அளிக்கலாம் என்று திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

திருப்பூா்: சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்கள் பகிரப்பட்டால் புகாா் அளிக்கலாம் என்று திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் ஆட்சேபனைக்குரிய தகவல்களை குறுஞ்செய்தி மூலமாகவோ, சமூக வலைதளங்களிலோ பகிரப்பட்டால், அவ்வாறு பகிா்பவா்கள் குறித்த தகவல்களுடன் திருப்பூா் மாநகர தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்.

இது தொடா்பாக 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை 63834-35135 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com