திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காங்கயம் சாலை நல்லூா் அருகே நிலைக் கண்காணிப்பு குழு அதிகாரி திருமால்செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், காரில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த வில்லியம்ஸ் (40) என்பவரிடம் விசாரணை நடத்தினா். இதில், வெள்ளக்கோவிலில் ஒரு நிலத்தை விற்பனை செய்து பணத்தைக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com