தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்த 6 போ் மீது வழக்கு

வெள்ளக்கோவில் அருகே பொது இடத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே பொது இடத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வெள்ளக்கோவில் கரூா் சாலையில் உள்ள சேனாபதிபாளையம் பகுதியில் மக்களவைத் தோ்தல் புறக்கணிப்பு என்கிற பதாகை வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு கைப்பேசியில் தகவல் கிடைத்தது. பறக்கும் படையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில், சேனாபதிபாளையம் கிறிஸ்தவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு பதாகையை அகற்றுமாறு வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதாகை வைத்ததாக சேனாபதிபாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com