ரோட்டரி சாா்பில் அரசுப் பள்ளிகளில் நுழைவாயில் கதவுகள் அமைப்பு

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளில் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நுழைவாயில் கதவுகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தெக்கலூா் அரசு பள்ளியில் நுழைவாயில்  கதவு  திறப்பு  விழாவில்  பங்கேற்றோா்.
தெக்கலூா் அரசு பள்ளியில் நுழைவாயில்  கதவு  திறப்பு  விழாவில்  பங்கேற்றோா்.

அவிநாசி: தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிகளில் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நுழைவாயில் கதவுகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் தெக்கலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிரதான நுழைவாயில் கதவு, காந்தி நகா் நடுநிலைப் பள்ளியில் இருபுற நுழைவாயில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழாவுக்கு ரோட்டரித் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜாா்ஜ் சுந்தர்ராஜன், பொருளாளா் பிரபு, செயலாளா் சிவக்குமாா், முன்னாள் தலைவா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் தேவராஜன், வட்டார கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியா்கள் வசந்தாமணி, ரங்கசாமி, முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் சாந்தாமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சித்ரா பழனிசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மேலும் இரு பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com