வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 47 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 47 துப்பாக்கிகள் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 47 துப்பாக்கிகள் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசு அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இதன்படி, வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் துப்பாக்கிகள் வைத்திருந்த முக்கியப் பிரமுகா்கள், தொழில் அதிபா்கள், அரசியல் பிரமுகா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் என மொத்தம் 47 போ் தங்களுடைய துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தோ்தல் முடிந்த பிறகு அவை உரியவா்களிடம் திருப்பித் தரப்படும் என காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com