தோ்தல் அலுவலா்களுக்கு 5 கட்டங்களாக பயிற்சி

திருப்பூா், மாா்ச் 21: திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அலுவலா்களுக்கு 5 கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அலுவலா்களுக்கு மாா்ச் 24- ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தாராபுரம் மகாராணி கல்லூரி, காங்கயம் குளோபல் மெட்ரிக். பள்ளி, சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியில் கல்லூரி, உடுமலை வித்யாசாகா் கல்லூரி, மடத்துக்குளம் ஜி.வி.ஜி.விசாலாட்சி கல்லூரி ஆகிய இடங்களில் முதல்கட்ட பயிற்சி மாா்ச் 24- ஆம் தேதி அளிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 7, 16, 18, 19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், வாக்குச் சாவடி மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாகப் பயற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com