பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

பல்லடம், மாா்ச் 21: பல்லடம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தில் பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பொங்கலுாா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணியை பொங்கலுாா் வட்டாரக் கல்வி அலுவலா் பூங்கொடி தொடங்கிவைத்தாா். தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் வரவேற்றாா். சிலம்பம் பயிற்சியாளா் முப்பிடாதி செல்வன் தலைமையில் மாணவா்கள் சிலம்பம், ரிங், சுருள்வால் சுற்றினாா். இதைத் தொடா்ந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணியில், பள்ளி மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி மாணவா்கள், தன்னாா்வலா் உமா மகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பிரேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com