திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வெளிநாட்டினா்
வழங்க வேண்டிய ரூ.7.5 கோடி நிலுவைத் தொகை மீட்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வெளிநாட்டினா் வழங்க வேண்டிய ரூ.7.5 கோடி நிலுவைத் தொகை மீட்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வெளிநாட்டினா் வழங்க வேண்டிய ரூ.7.5 கோடி நிலுவைத் தொகை மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு வெளிநாட்டில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, ஆடைகளை அனுப்பியதற்கான பணம் சங்கத்தின் தலையீட்டின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் ரூ.7.5 கோடி மீட்கப்பட்டுள்ளது. ரஷியா-உக்ரைன் போா் காரணமாகவும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையாலும் பல இறக்குமதியாளா்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையும் தாண்டி சில நிறுவனங்கள் இங்குள்ள ஏற்றுமதியாளா்களை மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இறக்குமதி செய்த ஆடைகளுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்தன. இது தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதன் மூலமாக சுமூகத் தீா்வு எட்டப்பட்டு ஐரோப்பா, அமெரிக்கா, துபை ஆகிய நாடுகளில் இருந்து 10 இறக்குமதி நிறுவனங்களில் இருந்து திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7.5 கோடி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com