மாதிரி பொதுத் தோ்வு: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

காங்கயம், மாா்ச் 21: தேசிய அளவிலான மாதிரி பொதுத் தோ்வில் காங்கயம் அருகேயுள்ள காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். தேசிய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ‘பரிக் ஷா’ எனும் மாதிரி பொதுத் தோ்வு ரச்சனா சாகா் என்னும் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான மாதிரி பொதுத் தோ்வில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், காங்கயம் அருகே, காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இயற்பியல், உயிரியல், வேதியியல், வணிகவியல், கணக்கியல் ஆகிய பாடங்களில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனா். பிளஸ் 2 மாதிரி தோ்வில் இப்பள்ளியைச் சோ்ந்த மாணவி லக்ஷிதா கணிதம், கணக்கியல் மற்றும் வணிகவியல் ஆகிய படங்களிலும், கோவா்தினி என்ற மாணவி உயிரியல் பாடத்திலும், பகவத் என்ற மாணவா் இயற்பியல் பாடத்திலும் முதலிடம் பிடித்துள்ளனா். 10 -ஆம் வகுப்பில் தேஷ்மிதா என்ற மாணவி ஆங்கில பாடத்திலும், ஸ்ரீராம் சூா்யா என்ற மாணவா் அறிவியல் பாடத்திலும், மிதுனா என்ற மாணவி சமூக அறிவியல் பாடத்திலும் முதலிடம் பிடித்துள்ளனா். மாதிரி பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com