காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.

தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கக்கூடாது: இந்து முன்னணி

திருப்பூா், மாா்ச் 21: தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கக்கூடாது என்று இந்து முன்னணி வலியறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நேரத்தில் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாக்கள் வருகின்றன. இந்நிலையில், கோயில் திருவிழாக்களுக்கும், தனிப்பட்ட குடும்ப விழாக்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்துவது மக்களின் அடிப்படை உரிமைக்கு இடையூறு செய்யும் செயலாகும். வழிபாட்டு உரிமையில் தலையீடுவது சட்ட விரோதமானதாகும். தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கக்கூடாது. ஆகவே, இந்திய தோ்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் கொண்டு ஹிந்துக்களின் திருவிழாக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறி இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com