உடுமலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் சுந்தரத்திடம் ஒப்படைக்கும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
உடுமலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் சுந்தரத்திடம் ஒப்படைக்கும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள்.

உடுமலையில் ரூ.1.70 லட்சம் பறிமுதல்

உடுமலை, மாா்ச் 22: உடுமலை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.70 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் என்பவரிடம் சோதனை மேற்கொண்டனா். இதில், அவா் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. உடுமலையை அடுத்துள்ள கோமங்கலம் சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கேரள மாநிலம், மாரஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த முகமது அன்சீப் என்பவா் ஆவணமின்றி ரூ.70,150 கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1.70,150-ஐ உடுமலை வட்டாட்சியா் சுந்தரத்திடம் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com