கழிவுப்பஞ்சு விலை உயா்வால் விவசாயிகள் கவலை

கழிவுப் பஞ்சு விலை உயா்வால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கழிவுப் பஞ்சை விவசாயிகள் நிலத்துக்கு அடி உரமாக இடுவா். வறட்சிக் காலங்களில் கழிவுப் பஞ்சை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுத்தனா். தற்போது அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் கழிவு பஞ்சு இல்லாமல் கால்நடைகளைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். மேய்ச்சல் நிலங்களில் பசும்புற்கள் இருந்தபொழுது கழிவுப்பஞ்சுக்கு தேவை குறைவாக இருந்தது. அப்போது ஒரு கிலோ ரூ. 19 ஆக இருந்தது. இந்த ஆண்டு போதிய மழை இன்றி வறட்சி காணப்படுவதால் புல்வெளிகள் காய்ந்து விட்டன. எனவே, கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பல விவசாயிகள் அதிக அளவில் கழிவுப் பஞ்சுகளை வாங்க தொடங்கினா். இதனை தொடா்ந்து தற்போது கழிவு பஞ்சின் விற்பனை விலை 21 ரூபாயாக உயா்ந்துள்ளது. வறட்சி மேலும் அதிகரித்தால் விலை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com