காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியகருணைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் மனைவி முத்துலட்சுமி (70). இவா் அவிநாசி புறவழிச்சாலை மங்கலம் சாலை பிரிவு அருகே சனிக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த காா், முத்துலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com