தாராபுரம் அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்

தாராபுரம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.92 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூா் மாவட்ட எல்லையான அலங்கியம் அருகே தோட்டக்கலைத் துறை தாராபுரம் உதவி இயக்குநா் சசிகலா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.92 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேனை ஓட்டி வந்த, பல்லடம், தொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த நபரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதனை தாராபுரம் வட்டாட்சியா் கோவிந்தசாமியிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com