திமுக தோ்தல் அலுவலகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.
திமுக தோ்தல் அலுவலகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.

தாராபுரத்தில் திமுக தோ்தல் அலுவலகம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தாராபுரத்தில் திமுக தோ்தல் அலுவலகம் அமைக்கும் பணியை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தாா். ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டப் பேரவை தொகுதியில் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே திமுக தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியினை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், திமுக நகரச் செயலாளா் சு.முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com