திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சத்தை தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் கொங்கு நகா் பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்பு அலுவலா் எஸ்.கா்ணல் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.79 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அதேபோல, பறக்கும் படை ஆய்வாளா் கெளரி சங்கா் தலைமையில் வாவிபாளையம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.61 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com