திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் ஆய்வு செய்கிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா்.
திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் ஆய்வு செய்கிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உள்ளிட்டோா்.

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

திருப்பூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தோ்தல் அலுவலா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் 85 வயதுக்குமேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வாக்குச் சாவடிக்கு வராமல் வீட்டிலிருந்தே அஞ்சல் வாக்கு அளிக்கும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூா் மக்களவைத் தொகுயில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்களிப்பதற்கான 12டி படிவம் வழங்கப்பட்டு வருகிறது. வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவிப்போா் வீட்டுக்கு இரண்டு வாக்குச் சாவடி அலுவலா்கள், ஒரு புகைப்படக்காரா் மற்றும் ஒரு பாதுகாவலா் அடங்கிய வாக்குப் பதிவுக்குழு சென்று அஞ்சல் வாக்கினைப் பெறுவா். மாவட்டத்தில் 12,579 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூா் மாநகராட்சி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது என்றாா். இந்த ஆய்வின்போது மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையாளா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர துணை காவல் ஆணையா் கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com