5 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட திருப்பூா் மாவட்டம்: சூடுபிடிக்கும் தோ்தல் களம்

5 மக்களவைத் தொகுதிகளுடன் திருப்பூா் மாவட்ட தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருப்பூா் மாவட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு உருவானது. மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, பல்லடம், திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மேலும் திருப்பூா், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளும் மாவட்டத்தில் அடங்கியுள்ளன. திருப்பூா் மக்களவைத் தொகுதியில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, கோவை தொகுதியில் பல்லடம், ஈரோடு தொகுதியில் தாராபுரம், காங்கயம், பொள்ளாச்சி தொகுதியில் உடுமலை, மடத்துக்குளம், நீலகிரி தொகுதியில் அவிநாசியும் இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி 5 தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளா்கள், கட்சி நிா்வாகிகள், பிரமுகா்கள், நட்சத்திர பேச்சாளா்கள் என மாறிமாறி பிரசாரம் மேற்கொள்வாா்கள் என்பதால் திருப்பூா் மாவட்ட தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com