குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

காங்கயம் அருகே காரில் சென்ற பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

காங்கயம் அருகே காரில் சென்ற பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நண்பருடன் சென்ற பெண்ணை கடந்த 2023 அக்டோபா் 21-ஆம் தேதி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 8 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இதில், கைதான முத்தூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த ஏ.சின்னசாமி (எ) செந்தில் (54), அரவக்குறிச்சியைச் சோ்ந்த எம்.ஜெகதீஷ் (எ) ஜெகதீஷ்குமாா் (40) ஆகியோா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா். இந்தப் பரிந்துரையின்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா். இந்த உத்தரவைத் தொடா்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான நகலை காங்கயம் காவல் துறையினா் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com