திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.81 லட்சம் பறிமுதல்

திருப்பூா் மாநகரில் 4 இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.81 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரில் 4 இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.81 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தலை ஒட்டி தோ்தல் நடத்த விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் வாவிபாளையம், நல்லாத்துப்பாளையம் ஜி.என்.காா்டன், நெசவாளா் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ.2.81 லட்சத்தை பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com