படியூரில் 3 தொலைக்காட்சிப் பெட்டிகள் பறிமுதல்

காங்கயம் அருகே படியூா் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் அருகே படியூா் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். காங்கயம் அருகே திருப்பூா் சாலையில் உள்ள படியூா் பகுதியில் காங்கயம் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவா் இருசக்கர வாகனத்தில் 3 தொலைக்காட்சிப் பெட்டிகளை (43 இன்ச்-1 எண்ணிக்கை, 32 இன்ச்-2 எண்ணிக்கை) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றுள்ளாா். இதையடுத்து, 3 தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, காங்கயம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாா், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com