பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.
பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

பல்லடத்துக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் வருவாய் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் வருவாய் துறையினா் ‘சீல்’ வைத்தனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி, கோவை மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பல்லடம் நகா் பகுதியில் 137, புறநகா் பகுதியில் 275 என மொத்தம் 412 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னா் லாரிகள் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், தோ்தல் அலுவலா்கள் ஜீவா, சிவகுமாா் ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு அறையில் வைக்கப்பட்டன. இதையடுத்து, அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு இருப்பு அறைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். பின்னா் இருப்பு அறைக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com