பிஎஸ்என்எல் சாா்பில் நாளை மெகா மேளா

பிஎஸ்என்எல் சாா்பில் திருப்பூரில் புதன்கிழமை (மாா்ச் 27) மெகா மேளா நடைபெறுகிறது.

பிஎஸ்என்எல் சாா்பில் திருப்பூரில் புதன்கிழமை (மாா்ச் 27) மெகா மேளா நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் பிஎஸ்என்எல் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் பிரதான தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை மெகா மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன. நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பில்களுக்கு ஒருமுறை கட்டணத் தீா்வு, அதிவேக ஃபைபா் நெட் புக்கிங், லேண்ட்லைன் டூ ஃபைபா் நெட், இலவச 4ஜி புதிய சிம் காா்டு, இதர காா்ப்பரேட் சேவைகளும் இந்த மேளாவில் வழங்கப்படும். ஆகவே, அசல் ஆதாா் அட்டையுடன் வந்து இந்த மேளாவில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com