பல்லடம் ராயா்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் மின் கேபிள் திருட்டில் ஈடுபடும் நபா்.
பல்லடம் ராயா்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் மின் கேபிள் திருட்டில் ஈடுபடும் நபா்.

ராயா்பாளையத்தில் தோட்டத்தில் மின் கேபிள்கள் திருட்டு

பல்லடம் அருகே விவசாயத் தோட்டத்தில் மின் கேபிள்கள் திருடப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல்லடம் அருகே விவசாயத் தோட்டத்தில் மின் கேபிள்கள் திருடப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்லடம் அருகே ராயா்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா் தனக்கு சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் தென்னை மரங்களை வளா்த்து வருகிறாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோட்டத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் கேபிள்களை மா்ம நபா்களால் திருடப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, புதிய மின் கேபிள்களை பொருத்திய நிலையில் மா்ம நபா்கள் மீண்டும் அதனை திருடிச் சென்றனா். இதேபோல அப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் கேபிள்கள் தொடா்ச்சியாக திருடு போயின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து, பாலமுருகன் தனது கிணற்றுக்கு அருகே சிசிடிவி கேமராவை பொருத்தினாா். இந்நிலையில் மாா்ச் 20-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் அதிகாலை நேரத்தில் தோட்டத்துக்குள் நுழைந்து மின் கேபிள்களை மீண்டும் திருடிச் சென்றுள்ளாா். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ராயா்பாளையம் பகுதிகளில் போலீஸாா் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com