பளு தூக்கும் போட்டி: காங்கயம் அரசு கலைக் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

கலை அறிவியல் கல்லூரியில், தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மாணவா் ஏ.ஜெயராமன்.
மாணவா் ஏ.ஜெயராமன்.

தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சிறப்பிடம் பெற்றுள்ளாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள பழனிசாமி கலை அறிவியல் கல்லூரியில், தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் காங்கயம் அருகே முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவா் ஏ.ஜெயராமன், 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, தென்னிந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றாா். போட்டியில் வெற்ற மாணவா் ஜெயராமனுக்கு, கல்லூரி முதல்வா் சே.ப.நசீம்ஜான் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com