மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

திருப்பூரில் 17 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பின்னலாடை நிறுவன ஊழியா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த ராஜபட்டினத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (23). இவா், திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தங்கியிருந்து பின்னலாடை நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளாா்.

இவா், அதே பகுதியில் உள்ள 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது. இது குறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com