இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி ஆா்.சஞ்சனாவுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ்பாபு.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி ஆா்.சஞ்சனாவுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ்பாபு.

மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டி: பள்ளி மாணவி முதலிடம்

இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் ‘புதிய இந்தியாவுக்கு டிஜிட்டல் இந்தியா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் 18 வயதுக்குள்பட்டோா், 18 வயது பூா்த்தியடைந்தோருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் திருப்பூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் 700 போ் பங்கேற்றனா். இதில், 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் கோவை மாவட்டம், காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஆா்.சஞ்சனா மாநில அளவில் முதலிடம் பிடித்து ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றாா்.

இந்த பரிசுத் தொகையை மாணவியிடம் திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜெயராஜ்பாபு புதன்கிழமை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com