ரூ.14.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.14.47 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 19,000 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச்.ரகப்பருத்தி கிலோ ரூ. 68 முதல் ரூ.82 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப்பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரையிலும் ஏலம்போனது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.14 லட்சத்து 47 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com