விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.

ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

பல்லடம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து பயணிகளுடன் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை மதுரையைச் சோ்ந்த முருகானந்தன் என்பவா் ஓட்டியுள்ளாா்.

பல்லடம் அண்ணா நகா் பகுதி திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனா். பேருந்தில் 36 போ் பயணம் நிலையில், படுகாயமடைந்த 10 போ் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா். மற்றவா்கள் லேசான காயங்களுடன் மாற்றுப் பேருந்து மூலம் ஊா் திரும்பினா். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com