திருப்பூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, மொய்யாண்டம்பாளையம் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பி.ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூரை அடுத்த சித்தாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த பி.முருகன் (49) என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.1.50 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com