நெருப்பெரிச்சலில் ரூ. 58 ஆயிரம் பறிமுதல்

திருப்பூா், நெருப்பெரிச்சல் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.58 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் வடக்கு வட்டம், நெருப்பெரிச்சல் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் என்பவரிடம் சோதனை செய்தபோது, அவா் உரிய ஆவணமின்றி ரூ.58 ஆயிரம் கொண்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com