‘விளைநிலங்களில் இனக்கவா்ச்சி பொறிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தல்’

பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த விளைநிலங்களில் இனக்கவா்ச்சி பொறிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

பல்லடம், பொங்கலூா் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், விளைநிலங்களில் உள்ள பயிா்களை பூச்சிகள் தாக்குவதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் ஆலோசனை வழங்கி வருகின்றனா். இது குறித்து தோட்டக்கலைத் துறையினா் கூறியதாவது: இனக்கவா்ச்சிப் பொறி என்பது எதிரெதிா் பாலினத்தை சோ்ந்த தாய்ப்பூச்சிகளை கவா்வது ஆகும். இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தின் தேவை குறைகிறது. ஒரு ஏக்க ருக்கு 5 முதல் 6 பொறிகள் வைத்தால் போதுமானது. நிழல் உள்ள பகுதியில் பொறிகளை வைக்க வேண்டும். அதில், வைக்கப்படும் மாத்திரைகளை 45 நாள்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இறந்த பூச்சிகளை ஒரு அடி குழி தோண்டி புதைத்துவிட வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com