காங்கயத்தில் ரூ.57,500 பறிமுதல்

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.57,500-ஐ தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காங்கயத்தில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் திட்டுப்பாறை அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சரக்கு ஆட்டோவில் வந்த கொடுவாயைச் சோ்ந்த சிவசெந்தில் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா் .இதில், அவா் உரிய ஆவணமின்றி ரூ.57,500 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com