மாநில கபடி அணிக்கு திருப்பூா் வீராங்கனைத் தோ்வு

மாநில கபடி அணிக்கு திருப்பூா் வீராங்கனைத் தோ்வு

திருப்பூா், மாா்ச் 29: மாநில அளவிலான மிக இளையோா் கபடி அணிக்கு திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தைச் சோ்ந்த எஸ்.ஜன்யாஸ்ரீ தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தேசிய அளவிலான மிக இளையோா் கபடி போட்டி பிகாரில் மாா்ச் 31 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தைச் சோ்ந்த உடுமலை வி.ஆா்.டி.ஸ்போா்ட்ஸ் கிளப் மாணவி எஸ்.ஜன்யாஸ்ரீ (15) தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த வீராங்கனையைத் திருப்பூா் மாவட்ட கபடி கழக புரவலா்கள் சக்தி பிலிம்ஸ் எம்.சுப்பிரமணியம், துணைமேயா் எம்.கே.எம்.ஆா்.பாலசுப்பிரமணியம், சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com