திருப்பூா் வடக்கு தொகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம். உடன், மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் உள்ளிட்டோா்.

அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்

திருப்பூா் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம் தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா். திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப.அருணாசலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், திருப்பூா் வடக்கு தொகுதிக்குள்பட்ட குமாா் நகா் விநாயகா் கோயில் முன் தனது பிரசாரத்தை தொடங்கினாா். இதைத் தொடா்ந்து, 60 அடி சாலை, குபேர விநாயகா் கோயில், காமாட்சியம்மன் கோயில் வீதி, பிச்சம்பாளையம், சிவன் திரையரங்கம், கருப்பராயன் கோயில், வளையங்காடு, பத்மாவதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பிரசாரத்தின்போது, திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், பகுதி செயலாளா் ஹரிஹரசுதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com