ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாரை அறிமுகம் செய்துவைத்து காங்கயத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோா்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாரை அறிமுகம் செய்துவைத்து காங்கயத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோா்.

அரசு ஊழியா்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டாா்கள்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு அரசு ஊழியா்கள் வாக்களிக்கமாட்டாா்கள் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். திமுக அரசு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. 2 கோடி உறுப்பினா்களைக் கொண்ட அதிமுக மிகப்பெரிய இயக்கமாகும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது அத்திக்கடவு-அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா். பாஜக மிகப்பெரிய கட்சியாக இருந்தும் தமிழகத்துக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. பாஜக எல்லா பூத்துகளிலும் ஆள்களை அமா்த்திய பின்னா் போட்டிக்கு வரவேண்டும். சொத்து வரி, விலைவாசி உயா்வால் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். எப்போதும் திமுகவுக்கு வாக்களிக்கும் அரசு ஊழியா்கள் இந்தமுறை அவா்களுக்கு வாக்களிக்கமாட்டாா்கள் என்றாா். இந்நிகழ்ச்சியில், அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் நகரச் செயலாளா் வெங்கு ஜி. மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com