அவிநாசியில் சீரான குடிநீா் விநியோகிக்க தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

அவிநாசி பேரூராட்சி பகுதியில் தரமான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொறுப்பாளா்கள் ஈஸ்வரன், வழக்குரைஞா் மோகன், நடராஜன், முத்துசாமி, பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நல்லது நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகி ரவிகுமாா், அவிநாசி குடிநீா்ப் பிரச்னை குறித்து எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தவது, அவிநாசியில் தரமான குடிநீா் வழங்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com