உடுமலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தோ்தல் பறக்கும் படையினா்.
உடுமலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தோ்தல் பறக்கும் படையினா்.

உடுமலையில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

உடுமலை அருகே உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். உடுமலையை அடுத்துள்ள பூசாரிபட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த மதியழகன் என்பவரை சோதனை செய்தபோது, அவா் உரிய ஆவணமின்றி ரூ.65 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் உடுமலை வட்டாட்சியா் சுந்தரம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com