திருப்பூரில் ரூ.75 ஆயிரம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.75 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் வடக்கு வட்டம், பெருமாநல்லூா் சாலை அண்ணாமலையாா் கோயில் அருகில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் தமிழ்வேந்தன் தலைமையிலான குழுவினா் வாகன சோனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த கே.ஜெகதீசன் (35) என்பவரிடம் நடத்திய சோதனையில், அவா் உரிய ஆவணமின்றி ரூ.75 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com