முருங்கைக்காய் வரத்து, விலை குறைவு: விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் மையம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு ஒட்டன்சத்திரம், காங்கயம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்குவா். கடந்த வாரம் 10 டன் முருங்கைக்காய் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் 8 டன் மட்டுமே இருந்தது. இதில், கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.10, செடி முருங்கைக்காய் ரூ.7, மர முருங்கைக்காய் ரூ.6 -க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்தும், விலையும் குறைந்துள்ளதால் பறிப்பு கூலிக்கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com