சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயில்ரங்கம் ஆறுமுகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயில்ரங்கம் ஆறுமுகப் பெருமான்.

வெள்ளக்கோவில் முருகன் கோயில்களில் சஷ்டி தின சிறப்பு பூஜை

சஷ்டி தினத்தையொட்டி, வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மூலனூா் சாலை சோளீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் கோயில், உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகா் பாலமுருகன் கோயில், எல்.கே.சி. நகா் ஸ்ரீ பாலமுருகன் கோயில், மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுதசுவாமி கோயில், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு வேல்முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com