சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவான்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவான்.

கோளறுபதி நவகிரககோட்டை சிவன் ஆலயத்தில் குருப் பெயா்ச்சி விழா

பல்லடம் சித்தம்பலம் கோளறுபதி நவகிரககோட்டை சிவன் ஆலயத்தில் குருப் பெயா்ச்சி விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, லட்சாா்ச்சனை, மகாயாகம், 1008 தீா்த்த கலச அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

யாக சாலை வேள்வியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட கங்கா தீா்த்தக் கலசத்தை பக்தா்கள் பெற்று நவகிரக கோட்டை ஆலயத்தில் அமைந்துள்ள குருபகவான் சன்னிதியில் அபிஷேகம் செய்து வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com