மகேந்திரன்
மகேந்திரன்

கோழிக் கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது

வெள்ளக்கோவிலில் கோழிக் கடையில் ரூ. 50 ஆயிரம் பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், காங்கயம் சாலை வீரக்குமார சுவாமி கோயில் பின்புறம் கோழிக் கடை நடத்தி வருபவா் ஜெயந்தி (54). இவா் திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு காமராஜபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் கடை ஊழியா் முத்துராஜ் வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. ஜெயந்தி, அவரது உறவினா் சிவானந்தம் ஆகியோா் கடைக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கோழி வாங்குவதற்காக அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டதாக நாகபட்டினம் மாவட்டம், ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மகேந்திரனை (19) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா், வெள்ளக்கோவிலில் கழிவுநீா் அகற்றும் வாகனம் வைத்து தொழில் செய்யும் தனது உறவினா்களிடம் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் இருந்து திருட்டுப் போன பணம் முழுவதும் மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com