பணியாளா்களுக்கு உணவு வழங்கும் நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன்.
பணியாளா்களுக்கு உணவு வழங்கும் நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன்.

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

தொழிலாளா் தினத்தையொட்டி வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை கௌரவிக்கப்பட்டனா்.

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், களப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் அனைவருக்கும் பரிசுகள் வழங்கியதுடன், கோடையைச் சமாளிக்க 10 லிட்டா் தண்ணீா் கேன்களையும் வழங்கினாா். மேலும், 200 நபா்களுக்கு அசைவ பிரியாணியுடன், உணவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com