நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருப்பூா் சிட்கோ முதலிபாளையத்தில் உள்ள நிப்ட் -டீ பின்னலாடைக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் 1997 -இல் படித்த மாணவா்கள் முதல் 2023- ஆம் ஆண்டு வரை படித்து முடித்த மாணவா்கள் வரை 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்கர காா்த்திகேயன் வரவேற்றாா். இதில், முன்னாள் மாணவா்களின் குழந்தைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. முன்னாள் மாணவா் சங்க செயலாளா் சேகா் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com