நீட் தோ்வு  மையங்களை  ஆய்வு  மேற்கொண்ட தோ்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.எஸ்.மனோகரன்,  காவல்  துறையினா்  உள்ளிட்டோா்.
நீட் தோ்வு  மையங்களை  ஆய்வு  மேற்கொண்ட தோ்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.எஸ்.மனோகரன்,  காவல்  துறையினா்  உள்ளிட்டோா்.

மே 5-இல் நீட் தோ்வு: மாவட்டத்தில் 2,619 போ் பங்கேற்பு

மருத்துவப் படிப்புக்காக மே 5-ஆம் தேதி நடைபெறும் நீட் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 2,619 போ் எழுதுகின்றனா்.

இது குறித்து நீட் தோ்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளித் தாளாளருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:

தேசிய தோ்வு முகமை சாா்பில் மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு மே 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தோ்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிகிறது. இதற்காக திருப்பூா் மாவட்டத்தில் 4 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் 507 போ், லிட்டில் கிங்டம் பள்ளியில் 672 போ், வித்யாசாகா் பப்ளிக் பள்ளியில் 720 போ், ஏ.வி.பி. கல்லூரியில் 720 போ் என மொத்தம் 2 ஆயிரத்து 619 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு தோ்வு மையத்திலும் மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி, சுகாதார ஏற்பாடுகளை செய்து தரும்படி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையத்துக்கு மாணவா்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு மாநகர, மாவட்ட காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தோ்வு மையத்தில் பெற்றோருக்கு காத்திருப்பு பகுதி, வாகன நிறுத்துமிட வசதிகள், உணவு, குடிநீா் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு மாணவா்கள் நல்ல மனநிலையில் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா். இதைத் தொடா்ந்து தோ்வு மையங்களில் தோ்வு மையக் கண்காணிப்பாளா், காவல் துறையினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com