கண்ணபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 4.23 லட்சம் உண்டியல் காணிக்கை

வெள்ளக்கோவில் அருகிலுள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.23 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலின் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்த ஏப்ரல் 12 முதல் 26- ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 8 திருவிழா உண்டியல்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், காங்கயம் சரக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கண்ணன், கோயில் செயல் அலுவலா் ராமநாதன் முன்னிலையில் திருவிழா உண்டியல்கள் அண்மையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரூ. 4 லட்சத்து 23 ஆயிரத்து 457 ரொக்கம், 19.15 கிராம் தங்கம், 45.52 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருக்கோயில் கணக்கா் சிவகுமாா், பணியாளா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் இதில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com