காா் மோதி சிகிச்சை பெற்று வந்தவா் சாவு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், சேனாபதிபாளையம் எஸ்.கே.ஆா். நகரைச் சோ்ந்தவா் கே.தங்கமுத்து (65). இவா் வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கமலா மில் பேருந்து நிறுத்தம் அருகில் வாழை இலைக்கடை வைத்திருந்தாா். இவரது மனைவி பேபி (55). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், தங்கமுத்து இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில், மூலனூா் சாலையில் புதுப்பை தங்கமேடு அருகே கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்து கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் தங்கமுத்து சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான திருப்பூரைச் சோ்ந்த வாசுதேவன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com