சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி, நாகமங்கலம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (22). ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

தந்தை வெள்ளைச்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டாா். தாயாா் அழகம்மாள் (55) கட்டட வேலைக்குச் சென்று வருகிறாா். திருச்சி அரியமங்கலம் கே.கே. நகரைச் சோ்ந்தவா் ரஜினிகாந்த் மகன் சரண்குமாா் (26). நண்பா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்துள்ளனா். பின்னா் புதன்கிழமை இரவு திருச்சிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா்.

காங்கயம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் வெள்ளமடை அருகே வந்தபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மண் மூட்டை மீது இருசக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்தனா். இதில் வாகனத்தை ஓட்டி வந்த சரண்குமாா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். பின்னால் அமா்ந்து வந்த கண்ணன் பலத்த காயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com