கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன்.

தொழிலாளா் தின பொதுக்கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் அவிநாசியில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஏஐடியூசி நிா்வாகி முத்துசாமி தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் செ.முத்துகண்ணன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் முத்துசாமி ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், சிஐடியூ நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, வெங்கடாசலம், பழனிசாமி, கனகராஜ், செல்வி, ஏஐடியூசி நிா்வாகிகள் சண்முகம், கோபால், செல்வராஜ், சுப்பிரமணியம், மகேந்திரன், பேபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com